ADVERTISEMENT

“அமைதி, செழிப்பை வழங்கட்டும்” மக்களுக்கு ஈத் அல் அதா வாழ்த்துகளைத் தெரிவித்த அமீரக ஜனாதிபதி..

Published: 27 May 2026, 11:34 AM |
Updated: 27 May 2026, 11:35 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புதன்கிழமை அதிகாலையில் ஈத் அல் அதாவை இன்று கொண்டாடி வரும் வேளையில், அமீரகத்தின் ஜனாதிபதி முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஒற்றுமை, அமைதி மற்றும் பகிரப்பட்ட உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல் அதாவைக் குறிக்கும் ஒரு செய்தியைப் பகிர்வதற்கு முன்பு, அமீரக ஜனாதிபதி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதியில் ஈத் அல் அதா தொழுகையை நிறைவேற்றினார்.

ஈத் கொண்டாட்டங்களின் போது அனைவரையும் சமூக நல்லிணக்கத்திற்கு நாடு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஷேக் முகமது அமீரகத்தின் ஆட்சியாளர்கள், குடிமக்கள், குடியிருப்பாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தைத் தங்கள் இல்லமாகக் கருதும் அனைவருக்கும் மற்றும் உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

தனது செய்தியில் அவர் கூறியதாவது: “இறைவன் நமது தேசத்திற்குத் தனது ஆசீர்வாதங்களைப் பொழிந்து, அனைவருக்கும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை வழங்குவாராக என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது செய்தி, ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து கவனம் செலுத்தும் அமைதி மற்றும் நிலைத்தன்மை, சமூக ஒற்றுமை, செழிப்பு மற்றும் சகவாழ்வு, விடயங்களை பிராந்திய அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியது.

ADVERTISEMENT

இன்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள மசூதிகளில், பெருந்திரளான இஸ்லாமியர்கள் ஈத் தொழுகையில் பங்கேற்றனர். மேலும், குடும்பங்களும் சமூகங்களும் ஒன்றுகூடி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு ஈத் அல் அதாவை கொண்டாடி வருகின்றன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel