ADVERTISEMENT

அமீரகத்தில் புதிதாக 16 இந்திய விசா மற்றும் தூதரக மையங்கள்.. அல்ஹிந்த் குழுமம் அறிவிப்பு!!

Published: 19 May 2026, 5:33 PM |
Updated: 19 May 2026, 5:33 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, பாஸ்போர்ட்களைப் புதுப்பித்தல், விசாக்களுக்கு விண்ணப்பித்தல் அல்லது சான்றளிப்புப் பணிகளை முடித்தல் போன்றவை பெரும்பாலும் நீண்ட பயணம், காத்திருப்பு நேரங்கள் மற்றும் நெரிசலான மையங்களை எதிர்கொள்வது போன்ற சிரமங்கள் இருக்கும். ஆனால், வெகுவிரைவில், அந்த செயல்முறை எளிதாகப் போகிறது.

ADVERTISEMENT

ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களிலும் 16 பிரத்யேக இந்திய விசா விண்ணப்பம் மற்றும் தூதரக சேவை மையங்கள் செயல்படவுள்ளதாக அல்ஹிந்த் குழுமம் அறிவித்துள்ளது. மேலும், இச்சேவைகள் அதிகாரப்பூர்வமாக ஜூலை 1, 2026 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள இந்தியக் குடிமக்களுக்கான தூதரக, பாஸ்போர்ட் மற்றும் விசா (CPV) சேவைகளைக் கையாள்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கும் அல்ஹிந்த் குழுமத்திற்கும் இடையே இன்று (மே 19, செவ்வாய்க்கிழமை) கையெழுத்தான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அல்ஹிந்த் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் அருண் ராதாகிருஷ்ணனின் கூற்றுப்படி, இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. மேலும் மையங்களுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டு, ஆள்சேர்ப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மையங்கள் பின்வரும் பலதரப்பட்ட சேவைகளை வழங்கும்:

ADVERTISEMENT
  • பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் செயலாக்கம்
  • விசா சேவைகள்
  • OCI கார்டு விண்ணப்பங்கள்
  • காவல்துறை அனுமதிச் சான்றிதழ்கள் (PCC)
  • சரணடைதல் சான்றிதழ்கள் (Surrender Certificates (SC))
  • அப்போஸ்டில் மற்றும் சான்றிதழ் சான்றளிப்பு (apostille and certificate attestation)
  • குளோபல் என்ட்ரி திட்ட சரிபார்ப்பு (Global Entry Program (GEP) verification)
  • பிற தூதரக ஆதரவு சேவைகள்

இந்த வலையமைப்பு, அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல் ஐன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா உள்ளிட்ட முக்கிய இடங்களை உள்ளடக்கி, எமிரேட்ஸ் முழுவதும் வசிப்பவர்களுக்கான அணுகலை மேம்படுத்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்திய சர்வதேச டெண்டர் செயல்முறைக்குப் பிறகு, இந்தத் திட்டம் அல்ஹிந்த் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெருமளவிலான இந்திய வெளிநாட்டவர் சமூகத்திற்கு, தூதரக சேவைகளை வேகமாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றுவதே இந்த புதிய மையங்களின் நோக்கம் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel