சவுதி அரேபியாவில் ட்ரோன் இடைமறிப்பின் போது அதன் பாகங்கள் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சவியோதியின் தைஃப் (Taif) நகரில் இடைமறித்து அழிக்கப்பட்ட ட்ரோனின் சிதறல்கள் அப்பகுதியில் விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன் ஒன்று இடைமறித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) இச்சம்பவம் குறித்து தங்கள் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டதாக சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புத் துறை (Civil Defence) தெரிவித்துள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்களால் (Houthi militia) அந்த ட்ரோன் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமனில் மோதல் தொடங்கி பல ஆண்டுகள் ஆன நிலையில், சவுதி அரேபியா மற்றும் ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி இயக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்து வருகிறது. 2014-ல் ஹூதிகள் ஏமன் தலைநகர் சனாவைக் கைப்பற்றினர், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே சவுதி தலைமையிலான இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 2022-ல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் சண்டை பெருமளவு தணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஹூதிகள் சவுதி அரேபியாவை நோக்கித் தாக்குதல்களை நடத்துவதும், ரியாத் ஏமனில் தாக்குதல்களை மேற்கொள்வதுமாக நிலைமை மாறியுள்ளது.

இந்தத் தீவிரமடைந்த மோதல் இப்போது தைஃப் நகர் வரை பரவியுள்ளது. அங்கு, கட்டிடங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. சேதமடைந்த கார், கடையின் முன்பகுதி மற்றும் சிதறல்களால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களின் பகுதிகள் ஆகியவற்றைச் சவுதி அதிகாரிகள் வெளியிட்ட படங்களில் காணமுடிகிறது.
கீழே விழுந்த சிதறல்களால் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன், சவுதி மற்றும் பாகிஸ்தான் குடிமக்கள் இருவரையும் காயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் நாட்டவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel