ADVERTISEMENT

அமீரகத்தில் எண்ணெய் கசிவால் மூடப்பட்டிருந்த கடற்கரைகள் மீண்டும் திறப்பு: குடும்பத்துடன் கடற்கரைகளுக்குத் திரும்பும் மக்கள்!!

Published: 14 Nov 2026, 1:11 PM |
Updated: 14 Nov 2026, 1:11 PM |
Posted By: Menaka

கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக சுமார் மூன்று வாரங்களாக மூடப்பட்டிருந்த ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா கடற்கரைகளுக்கு, குடும்பத்தினரும், நீச்சல் ஆர்வலர்களும், பொதுமக்களும் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது, வெளிப்புற நடவடிக்கைகளைத் தொடரவும், இதமான குளிர்கால வானிலையை ரசிக்கவும், கடற்கரையோரத்தில் பொழுதைக் கழிக்கவும் ஆவலாக இருந்த மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. பல வாரங்களாகப் பாதிப்புக்குள்ளான சுற்றுலாத் துறை மற்றும் ஹோட்டல் வணிகங்களிலும், முன்பதிவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், வழமைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஸ் அல் கைமாவில் வசிக்கும் பலருக்கு, ‘பிளமிங்கோ கடற்கரை’ (Flamingo Beach) மீண்டும் திறக்கப்பட்டது என்பது, தங்களுக்குப் பிடித்தமான உடற்பயிற்சி முறைகளுக்குத் திரும்புவதைக் குறிக்கிறது.

ADVERTISEMENT

வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சிக்காக கடற்கரைக்கு வரும் குடியிருப்பாளர், கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்ட செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார்.

இதேபோல், ஷார்ஜாவிலும், குளிர்காலத்தின் வருகையால் மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து அல் நஹ்தாவைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், வார இறுதி நாட்களில் குடும்பங்கள் பொழுதுபோக்கச் செல்லும் மிக முக்கியமான இடங்களில் இந்த எமிரேட்டின் கடற்கரைகளும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

குடும்பங்கள் பெரும்பாலும் நாள் முழுவதும் கடற்கரையிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்கள். உணவுகளை எடுத்துச் சென்று, குழந்தைகளுடன் ஓய்வெடுத்து, இதமான வானிலையை ரசித்து மகிழ்கிறார்கள்.

அமீரகத்தின் குளிர்கால மாதங்களில் வெளிப்புற நடவடிக்கைகளை எதிர்பார்த்திருந்த பலருக்கு, இந்தத் தற்காலிக மூடல் ஏமாற்றத்தை அளித்தது. எனவே, சிலர் இதற்கு மாற்றாக பாலைவனப் பகுதிகளுக்கோ அல்லது பள்ளத்தாக்குகளுக்கோ (wadis) செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

தற்போது கடற்கரைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், மக்கள் குடும்பத்துடன் வெளியே செல்லவும், வார இறுதி நாட்களில் கடற்கரைக்குச் செல்லவும் திட்டமிடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, மீண்டும் கடற்கரைக்குச் செல்வதில் குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர் என பலர் கூறியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel