உம் அல் குவைனில் உள்ள உம் அல் தூப் (Umm Al Thuoob) தொழிற்துறை பகுதிக்குச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் டிசம்பர் 1 முதல் மாற்று வழியைத் திட்டமிட வேண்டும், ஏனெனில் அப்பகுதியின் அணுகல் புள்ளிகளில் ஒன்றில் கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துகிறது.
இது தொடர்பாக உம் அல் குவைன் காவல்துறை வெளியிட்டுள்ள ஆன்லைன் அறிவிப்பின் படி, தொழில்துறைக்கு செல்லும் எக்ஸிட் வழி 103-இன் (Exit 103) நுழைவாயிலில் இந்த மூடல் பொருந்தும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, லாரி ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடைய மாற்று வழியைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த குறிப்பிட்ட நுழைவாயிலில் ‘லாரிகளுக்கு அனுமதி இல்லை’ என்ற அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டுள்ளது, அத்துடன் விதிமீறல்களைக் கண்காணித்து பதிவு செய்ய ஒரு போக்குவரத்து கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் எக்ஸிட் வழி 110 வழியாகத் திரும்பி, சுதந்திர மண்டல (Free Zone) நுழைவாயில் வழியாக தொழிற்பேட்டைக்குள் நுழைந்து மாற்று வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் லாரி கட்டுப்பாடுகளை மீறுவதற்கான அபராதம் என்ன?
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும், குறிப்பாக பரபரப்பான சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் லாரிகளுக்கு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து விதிமுறைகளின்படி, கனரக வாகனங்கள் தடைசெய்யப்பட்ட சாலைகள் அல்லது பகுதிகளுக்குள் நுழையும் ஓட்டுநர்கள், 1,000 திர்ஹாம் அபராதம் மற்றும் நான்கு கருப்புப் புள்ளிகளை எதிர்கொள்ள நேரிடும்.
துபாயின் லாரி இயக்கக் கட்டுப்பாடுகள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அக்டோபர் 1 முதல் பல முக்கிய சாலைகளில் 24 மணி நேர லாரி இயக்கக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கட்டுப்பாடுகள் அல் குத்ரா ஸ்ட்ரீட், அல் மேதான் ஸ்ட்ரீட், அனைத்து ஜங்ஷன் மற்றும் விமான நிலைய சுரங்கப்பாதை ஆகியவற்றை உள்ளடக்கியது.
கூடுதலாக, ஷேக் சையத் சாலை மற்றும் பெய்ரூட் ஸ்ட்ரீட் உள்ளிட்ட பிற சாலைகளிலும், அல் மிஸ்ஹர், முஹைஸ்னா மற்றும் ஓத் அல் முதீனா போன்ற குடியிருப்புப் பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கு லாரி கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
அதேபோல், விமான நிலையத் ஸ்ட்ரீட், ஓமன் ஸ்ட்ரீட்மற்றும் டமாஸ்கஸ் ஸ்ட்ரீட் போன்ற நகர்ப்புறச் சாலைகளில், மூன்று உச்ச நேரங்களில் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
- காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
- மதியம் 1 மணி முதல் 3 மணி வரை
- மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை
மேலும், லாரி ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள், மற்றும் வாகன உரிமையாளர்களுக்குக் கட்டுப்பாடுகள், நேரங்கள் மற்றும் மாற்று வழிகள் குறித்துத் தெரிவிப்பதற்காக, துபாய் காவல்துறையுடன் இணைந்து பிராந்தியப் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுநர்கள் புதிய விதிகளைப் புரிந்துகொள்ளவும், விதிமீறல்களைத் தவிர்க்கவும் உதவும் வகையில், விழிப்புணர்வுச் செய்திகள் பரவலாகப் பகிரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கடுமையான விபத்துக்கள் ஏற்படும் நிலையில் இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel