ADVERTISEMENT

அபுதாபியில் மே 4 முதல் செயல்பாட்டிற்கு வரும் இரண்டு புதிய ‘Darb’ டோல் கேட்கள்..!!!

Published: 23 Apr 2026, 11:29 AM |
Updated: 23 Apr 2026, 11:29 AM |
Posted By: Menaka

அபுதாபியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் உதவும் வகையில், தனது ‘Darb’ சுங்கச்சாவடி அமைப்பின் கீழ் இரண்டு புதிய டோல் கேட்களை தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வெளியிட்ட தகவலின்படி, கன்தூத் மற்றும் அல் குர்ம் ஆகிய இரண்டு புதிய கேட்களும் வருகின்ற மே 4, 2026 முதல் நாள் முழுவதும் (24/7) செயல்படத் தொடங்கும் என்பது தெரிய வந்துள்ளது.

புதிய கேட்கள் அமைந்துள்ள இடங்கள்

  • அல் குர்ம் டோல் கேட்: ஷேக் சையத் சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயிலில் அமைந்துள்ள வஹாத் அல் கரமா சாலையில் இது அமைந்துள்ளது.
  • கன்தூத் டோல் கேட்: கன்தூத்தில் உள்ள ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலையில் இது அமைந்துள்ளது.

வாகன ஓட்டிகள் ஷேக் ரஷீத் பின் சயீத் சாலை, அரேபியன் கல்ப் சாலை மற்றும் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சாலை போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

சுங்கக்கட்டண விவரங்கள் மற்றும் விலக்குகள்

இந்த கேட்களை ஒவ்வொரு முறை கடக்கும்போதும் 4 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், பின்வரும் பிரிவினருக்குச் சொந்தமான ஒரு வாகனத்திற்கு இக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது:

  • மூத்த குடிமக்கள்
  • மாற்றுத்திறனாளிகள் (People of Determination)
  • குறைந்த வருமானம் கொண்ட குடிமக்கள்
  • ஓய்வுபெற்ற குடிமக்கள்

போக்குவரத்து நெரிசல் நிலைகள், பயண முறைகள் மற்றும் மாற்றுப் பாதைகளின் இருப்பு ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், இந்தச் சுங்கச்சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ITC தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபிக்கும் துபாய்க்கும் இடையிலான E11 நெடுஞ்சாலையில், குறிப்பாக கன்தூத் மற்றும் அல் குர்ம் பகுதிகளுக்கு அருகில், புதிய சுங்கச்சாவடி கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததை முன்னரே வாகன ஓட்டிகள் கவனித்தனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த ‘Darb’ அமைப்பு, அபுதாபி அமீரகம் முழுவதும் போக்குவரத்துத் தேவைகளை நிர்வகித்தல், சாலைப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பயணங்களை மேலும் சீராக்குதல் ஆகிய பரந்த நோக்கங்களைக் கொண்ட அபுதாபியின் உத்திசார் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel