ADVERTISEMENT

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 140 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான பாலத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள ஷார்ஜா ஆட்சியாளர்!!

Published: 12 May 2026, 9:08 AM |
Updated: 12 May 2026, 9:35 AM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் போக்குவரத்து இயக்கத்தை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்ட புதிய மூன்று வழிப் பாலம் கட்டுவதற்கு ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தப் பாலமானது, மலிஹா சாலையை ஷேக் முஹம்மது பின் சையத் சாலையை நோக்கிச் செல்லும் சாலையுடன் இணைக்கும். மேலும், இது ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட் மற்றும் மலிஹா சாலை சந்திக்கும் இடத்தில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இந்தத் திட்டத்திற்கு 140 மில்லியன் திர்ஹம் செலவாகும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, ஓராண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தப் புதிய பாலம் அனைத்து திசைகளிலும் போக்குவரத்து ஓட்டத்தை கணிசமாக மேம்படுத்தும் என்றும், இந்த வழியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை சுமார் ஒன்பது நிமிடங்கள் குறைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT