துபாய் அரசாங்க மனிதவளத் துறை (DGHR) ஆணையம், ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டிற்கான ஈத் அல் அதா விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி துபாய் அரசாங்க நிறுவனங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளுக்கான ஈத் அல் அதா விடுமுறையானது, மே 25, திங்கட்கிழமை அன்று தொடங்கி, மே 29, வெள்ளிக்கிழமை அன்று முடிவடையும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ வேலை நேரம் ஜூன் 1, திங்கட்கிழமை அன்று மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஷிஃப்ட் அடிப்படையில் இயங்கும் நிறுவனங்கள் அல்லது வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் பொது சேவை மையங்கள், விடுமுறைக் காலம் முழுவதும் சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, தங்களின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வேலை நேரத்தைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துபாய் அரசாங்க மனிதவளத் துறையானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை, அரசாங்கம் மற்றும் மக்களுக்கும், அத்துடன் நாடு முழுவதும் மற்றும் அரபு, இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் மேலும், இந்த புனிதமான தினம் அனைவருக்கும் தொடர்ச்சியான செழிப்பு, நல்வாழ்வு மற்றும் ஆசீர்வாதங்களுடன் வர வேண்டும் என்றும் பிரார்த்திபதாகவும் தெரிவித்துள்ளது.