ADVERTISEMENT

2026 ஈத் அல் அதா கொண்டாட்டம்: துபாயில் இன்று இலவச ஐஸ்கிரீம் வழங்கப்படும் இடங்கள் எங்கே..??

Published: 27 May 2026, 8:07 AM |
Updated: 27 May 2026, 8:08 AM |
Posted By: Menaka

துபாயில் ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிடும் குடியிருப்பாளர்கள், பல பொதுப் பூங்காக்களில் இலவச ஐஸ்கிரீமைப் பெற்று மகிழலாம் என துபாய் முனிசிபாலிட்டி அறிவித்திருந்தது. ஆனால், முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் தற்போது ஐஸ்கிரீம் வழங்கும் நேரங்களை மாற்றியமைத்துள்ளனர்.

ADVERTISEMENT

துபாய் முனிசிபாலிட்டியால் முன்னர் அறிவிக்கப்பட்டபடி, முதல் இரண்டு நாட்களுக்கு மாலை 4 மணி முதல் 7 மணி வரை இலவச ஐஸ்கிரீம் வழங்கப்படும். ஆனால், தற்போது அது ஈத் பண்டிகையின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) மட்டும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை இலவச ஐஸ்கிரீம் வழங்கப்படும் என துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

துபாய் பொதுப் பூங்காக்கள் இந்த அறிவிப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, ஈத் கொண்டாட்டங்களின் போது “உங்கள் பயணத்தை ஐஸ்கிரீம் மூலம் குளிர்விக்க” குடியிருப்பாளர்களை அழைத்துள்ளன.

ADVERTISEMENT

இலவச ஐஸ்கிரீம் வழங்கும் பூங்காக்கள்

பார்வையாளர்கள் பின்வரும் ஆறு பூங்காக்களில் இலவச ஐஸ்கிரீமைப் பெற்றுக்கொள்ளலாம்:

  • க்ரீக் பார்க்
  • முஷ்ரிஃப் தேசியப் பூங்கா
  • ஸபீல் பார்க்
  • அல் சஃபா பார்க்
  • அல் பர்ஷா பாண்ட் பார்க்
  • அல் நஹ்தா பாண்ட் பார்க்

நீட்டிக்கப்பட்ட பூங்கா நேரங்கள்

துபாய் முனிசிபாலிட்டி, ஈத் விடுமுறைக் காலத்தில் முக்கிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் இயக்க நேரங்களையும் நீட்டித்துள்ளது.

ADVERTISEMENT

பின்வரும் பூங்காக்கள் தினமும் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும்:

  • குர்ஆனிக் பார்க்
  • ஜபீல் பார்க்
  • அல் மம்ஸார் பார்க்
  • அல் சஃபா பார்க்
  • க்ரீக் பார்க்
  • முஷ்ரிஃப் தேசியப் பூங்கா

இதற்கிடையில், துபாய் ஃபிரேம் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்க்பாட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பூங்காக்களுக்குள் உள்ள சில சுற்றுலாத் தலங்கள் தனித்தனி அட்டவணைகளைப் பின்பற்றும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்:

  • குர்ஆனிக் பூங்காவில் உள்ள கேவ் மற்றும் கிளாஸ் ஹவுஸ் (Cave and Glass House): காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை
  • முஷ்ரிஃப் மவுண்டைன் பைக் டிராக் (Mountain Bike Track): காலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை
  • முஷ்ரிஃப் மையம்: காலை 5.30 மணி முதல் நள்ளிரவு வரை

இந்த முன்னேற்பாடுகளை அறிவித்த துபாய் முனிசிபாலிட்டி, குடும்பத்தினரும் நண்பர்களும் எமிரேட்டின் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்குத் தலங்களில் “மகிழ்ச்சி நிறைந்த மற்றும் நிம்மதியான தருணங்களை” அனுபவித்து, ஈத் விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel