ADVERTISEMENT

அபுதாபியில் பாதசாரிகளை மோதிய கார்கள்.. 3 சம்பவங்களைக் காட்டி போலீஸ் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!! 

Published: 17 Sep 2026, 6:14 PM |
Updated: 17 Sep 2026, 6:21 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலையைப் பாதுகாப்பாகக் கடப்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். அதாவது, பாதசாரிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட கடக்கும் இடங்களைப் பயன்படுத்த வேண்டும், அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து விழிப்புடன் இருக்க வேண்டும். இந்நிலையில், அபுதாபி காவல்துறை புதன்கிழமையன்று, பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது ஏற்படும் விபத்துகளைக் காட்டும் வீடியோவை வெளியிட்டு, விபத்துகளின் அபாயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT

ஒரு சம்பவத்தில், இருவர் ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து சாலையைக் கடந்து கொண்டிருந்தபோது, ஒரு வாகன ஓட்டி வேகத்தைக் குறைக்கத் தவறி அவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்.

பாதசாரிகளைப் பாதுகாப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை வலியுறுத்தி, ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதசாரிகள் கடக்கும் இடங்களுக்கு அருகில் தங்கள் வேகத்தைக் குறைக்குமாறும் அபுதாபி காவல்துறை கேட்டுக்கொண்டது.

ADVERTISEMENT

மற்றொரு சம்பவத்தில், பல பாதசாரிகள் அதற்கென ஒதுக்கப்படாத பகுதியிலிருந்து சாலையைக் கடந்து, தங்களையும் மற்ற சாலைப் பயனாளர்களையும் ஆபத்தில் ஆழ்த்துவதைக் காணமுடிகிறது.

ஆகவே, போக்குவரத்து சிக்னல்களைப் பின்பற்றி, சாலையைக் குறுக்கே கடப்பதைத் தவிர்த்து, அதற்கென ஒதுக்கப்பட்ட பாதசாரி கடக்கும் இடங்கள், பாதசாரி பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலையை ஒழுங்கற்ற முறையில் கடப்பதற்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம். குறிப்பாக, சட்டவிரோதமாக சாலையைக் கடப்பதால் விபத்து ஏற்பட்டால், தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மார்ச் 2025-ல் நடைமுறைக்கு வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி போக்குவரத்துச் சட்டத்தின்படி, சாலைக்கு ஒதுக்கப்படாத பகுதியில் சாலையைக் கடந்து போக்குவரத்து விபத்தை ஏற்படுத்துபவர்கள், சிறைவாசம் மற்றும் 5,000 முதல் 10,000 திர்ஹாம் வரையிலான அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், மணிக்கு 80 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட வேக வரம்பு கொண்ட சாலைகளில் தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்கும். குற்றவாளிகள் குறைந்தது மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 10,000 திர்ஹாம் அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இருவரும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும், பரபரப்பான சாலைகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel