ADVERTISEMENT

UAE: சுகாதார துறையில் பணிபுரியும் 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கோல்டன் விசா வழங்கிய அபுதாபி..!!

Published: 6 Oct 2021, 3:25 PM |
Updated: 6 Oct 2021, 3:25 PM |
Posted By: admin

அபுதாபியில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் குடியிருப்பாளர்களின் சாதனைகளை கவுரவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அபுதாபியில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சகம் சார்பாக இன்று அக்டோபர் 06, 2021 புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்களின் சிறப்பான அர்ப்பணிப்பு, பொறுப்பு மற்றும் தியாகத்திற்காக அமீரகத்தில் பணிபுரியும் மருத்துவர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற தகுதியுடைவர்களாக அமீரக அரசால் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் கொரோனா தொற்றுநோய் காலத்திலும் பொதுமக்களின் நலனிற்காக சுகாதார துறையில் அவர்கள் ஆற்றிய பங்கும் பெரிதும் மதிப்புக்குரியது.

சுகாதார துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த கோல்டன் விசாவானது மருத்துவர்களும் அவர்களது குடும்பங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலம் தங்கி இருப்பதையும் மற்றும் சுகாதாரத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதையும் நோக்கமாக கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT