ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று..!!

Published: 7 Oct 2021, 1:28 PM |
Updated: 7 Oct 2021, 1:28 PM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக குறைவன கொரோனா தொற்றுக்களே பதிவாகி வருகின்றன. அரசின் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளால் அமீரகத்தில் கொரோனா பரவலானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் சில குறிப்பிட்ட பொது இடங்களுக்கு செல்ல முக கவசம் அணிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 7, 2021) புதிதாக 144 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 737,373 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,109 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 221 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 730,530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT