கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகளை மட்டும் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் கிரீன் பாஸ் முறையானது அபுதாபியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கான PCR சோதனையின் எதிர்மறையான முடிவுக்குப் பிறகு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையானது அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் 30 நாட்களுக்கு செயலில் இருக்கும்.
அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், கஃபேக்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குள் தடுப்பூசி போடப்படாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கிரீன் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் 23 அன்று சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாளர்களுக்கான புதிய சுற்றறிக்கையில், அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை (DCT) கிரீன் பாஸை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை விளக்கியுள்ளது.
>> AlHosn அப்ளிகேஷன்
>> AlHosn வலைத்தளம் (alhosnapp.ae).
>> SMS (எடிசலாட் பயனர்களுக்கு): ‘R’ என்ற எழுத்தைத் தொடர்ந்து ஒரு இடைவெளி விட்டு UID எண் அல்லது எமிரேட்ஸ் ஐடி எண்ணை டைப் செய்து ‘6336’ என்ற எண்ணுக்கு அனுப்பினால், சமீபத்திய கொரோனா சோதனை முடிவு அனுப்பப்படும்
>> ஃபோன் (எடிசலாட் பயனர்களுக்கு): *48 ஐ டயல் செய்து அதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த ஐடி எண் (UID Number) அல்லது எமிரேட்ஸ் ஐடி எண், பின்னர் # என்பதை டைப் செய்து, கால் பட்டனை அழுத்தி கொரோனா சோதனை முடிவைப் பெற்றுக்கொள்ளலாம்.