ADVERTISEMENT

வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்..!!

Published: 20 Oct 2021, 8:31 AM |
Updated: 20 Oct 2021, 8:31 AM |
Posted By: admin

அமீரகத்தில் அக்டோபர் 21 ம் தேதி மீலாது நபி விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததை அடுத்து, துபாயில் வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை தங்கள் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்களைத் தவிர, துபாயில் பொது பார்க்கிங் அனைத்தும் வியாழக்கிழமை இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் திருத்தப்பட்ட சேவை நேரங்கள் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர், பொது பேருந்துகள், மெட்ரோ, டிராம், ஃபெர்ரி போக்குவரத்து மற்றும் சேவை வழங்குநர் மையங்களுக்கு (வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை) பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சேவை வழங்குநர் மையங்கள் மற்றும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் வியாழக்கிழமை மூடப்படும் என்றும் அது அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உம் ராமூல், தேரா, அல் பார்ஷா, அல் மனாரா, அல் கஃபாஃப், அல் தவார் மற்றும் RTA தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் வழக்கம் போல் 24/7 சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT