ADVERTISEMENT

அமீரகத்தில் தொடர்ந்து இரண்டாம் நாளாக 100 க்கும் கீழ் கொரோனா தொற்று பதிவு..!!

Published: 22 Oct 2021, 4:29 PM |
Updated: 22 Oct 2021, 4:40 PM |
Posted By: admin

அமீரகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தற்பொழுது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 100 க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 2021) புதிதாக 88 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 739,106 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,128 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய நாளில் மட்டும் 135 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 733,008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.