ADVERTISEMENT

UAE: போக்குவரத்து அபராதத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவிப்பு..!!

Published: 14 Nov 2021, 4:30 PM |
Updated: 14 Nov 2021, 4:30 PM |
Posted By: admin

அஜ்மானில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கள் வாகனத்தை பறிமுதல் செய்வதில் இருந்தும் மற்றும் போக்குவரத்து புள்ளிகளையும் ரத்து செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அஜ்மானின் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமியின் உத்தரவுப்படி இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் ஏழு எமிரேட்டுகள் ஒன்றிணைந்து ஒரே நாடாக உருவாகிய 50 வது ஆண்டினை டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நாடு தழுவிய நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.