ADVERTISEMENT

UAE: குடியிருப்பு பகுதிகளுக்குள் டிரக் செல்ல தடை..!! மீறினால் அபராதம்..!! எந்த நேரங்களில் தெரியுமா..??

Published: 19 Nov 2021, 10:17 AM |
Updated: 19 Nov 2021, 10:37 AM |
Posted By: admin

அபுதாபியில் பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்துச் சட்டத்தின்படி, இந்த தடையை மீறுபவர்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்களுக்கு எதிராக நான்கு டிராஃபிக் பிளாக் பாயின்ட்கள் பதிவு செய்யப்படும் என்றும் அபுதாபி காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கனரக வாகனங்கள் சட்டத்திற்கு இணங்கவும், சாலை நுழைவாயில்களில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், அவர்கள் இயக்க திட்டமிடப்பட்ட நேரத்தைக் கடைப்பிடிக்கவும் காவல்துறை வலியுறுத்தியது.

ADVERTISEMENT

அபுதாபியில் காலை 6.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். எனவே இந்த நேரங்களில் கனரக வாகனங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் செல்வது தவிர்ககப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதே நேரத்தில் அல் அய்னில் போக்குவரத்து அதிகமுள்ள நேரம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.

ADVERTISEMENT

இந்த நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக கனரக வாகனங்களை இயக்கி வந்தால் அது சாலை முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்மார் சிஸ்டத்தின் மூலம் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.