ADVERTISEMENT

அமீரக தேசிய தின விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த மற்றுமொரு எமிரேட்..!!

Published: 30 Nov 2021, 1:53 AM |
Updated: 30 Nov 2021, 11:22 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் வாகன ஓட்டிகள் விடுமுறை நாட்களான டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா நகராட்சியின் உயர் அதிகாரிகள் கூறுகையில், சில குறிப்பிட்ட பகுதிகள் இதற்கு பொருந்தாது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் டிசம்பர் 4 சனிக்கிழமையன்று பார்க்கிங் கட்டணம் மீண்டும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா சிட்டியில் உள்ள பல பொது பார்க்கிங் பயனர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது மற்றும் முக்கிய பகுதிகளில் மிகப்பெரிய காலியான வாகன நிறுத்துமிடங்களை வழங்குவதற்கான நகராட்சியின் ஆர்வத்தின் கட்டமைப்பிற்குள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பகுதிகளில் முனிசிபாலிட்டி சைன் போர்டுகளை (signboards) நிறுவியுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக முக்கிய மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் பொது வாகன நிறுத்துமிடங்களை உருவாக்கி குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு வழங்குவதற்கான தனது ஆர்வத்தை முனிசிபாலிட்டி இதன் மூலம் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.