ஐக்கிய அரபு அமீரகத்தில் இதனை நாட்களாக நீடித்து வந்த கோடை கால வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து தற்போது குளிர்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில், அமீரகத்தின் உயர்ந்த மலைப்பகுதியான ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறைந்த பட்ச வெப்பநிலையாக 9.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, இன்று நாடு முழுவதும் வானிலை பொதுவாக சில பகுதிகளில் சில நேரங்களில் மேகமூட்டத்துடனும், சில நேரங்களில் பகுதியளவு மேகமூட்டத்துடனும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலின் சீற்றமானது பகல் முழுவதும் சிறிது முதல் மிதமானதாக இருக்கும் என்றும் இரவில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
துபாய் மற்றும் அபுதாபியை பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் குளிர்கால சீசன் தொடங்கி நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் என்பதும், இந்த குளிர்கால சீசனில் மலையின் உச்சி பகுதியில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அமீரக குடியிருப்பாளர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் மற்றும் அல் அய்னில் உள்ள ஜெபல் ஹபீத் ஆகிய மலையின் உச்சி பகுதிக்கு சென்று தங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இரவு நேரம் முழுவதையும் செலவழிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#أقل_درجة_حرارة سجلت على الدولة صباح هذا اليوم 9.2 درجة مئوية في جبل جيس (رأس الخيمة) الساعة 06:45 بالتوقيت المحلي لدولة الإمارات#The_lowest_temperature recorded over the country today morning is 9.2°C in Jabal Jais (Ras Al Khaimah) at 06:45 UAE Local time
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 3, 2021