ADVERTISEMENT

UAE: தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் இளவரசர் பகிர்ந்த புகைப்படம்.. சமூக வலைதளங்களில் வைரல்..!!

Published: 3 Dec 2021, 2:05 PM |
Updated: 3 Dec 2021, 2:09 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் தனது பொன்விழா ஆண்டை மிக விமரிசையாக வியாழக்கிழமை கொண்டாடியது. பொன்விழா கொண்டாட்டங்களின் பல நூறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

ADVERTISEMENT

அதில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது இரட்டையர்களான ஷேக்கா மற்றும் ரஷித் ஆகியோரின் படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பாரம்பரிய உடையில் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதக் குழந்தையான ஷேக்கா ஐக்கிய அரபு அமீரக கொடியின் வண்ணங்களில் ஆடை அணிந்துள்ளார். மேலும் ரஷீத் அரேபிய பாரம்பரிய உடையான கந்துரா அணிந்துள்ளார்.

ADVERTISEMENT

ஷேக் ஹம்தான் வெளியிட்ட இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ADVERTISEMENT