ADVERTISEMENT

அமீரகத்தில் வருடம் முழுவதும் இனி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஒரே நேரம்…

Published: 7 Dec 2021, 11:30 AM |
Updated: 7 Dec 2021, 11:31 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசானது வரும் ஜனவரி 1 முதல் புதிய வார விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதன்படி இனி வெள்ளி பிற்பகல், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டரை நாட்கள் இனி வாரந்தோறும் விடுமுறை என தெரிவித்துள்ளது. அனைத்து மத்திய அரசு துறைகளும் 2022 முதல் இதனை பின்பற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையொட்டி ஜனவரி 1 முதல் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் வருடம் முழுவதும் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 1.15 க்குப் பிறகு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT