ADVERTISEMENT

அமீரக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இரண்டரை நாட்கள் வார விடுமுறையை அறிவித்த தனியார் பள்ளிகள்….!!

Published: 7 Dec 2021, 1:29 PM |
Updated: 7 Dec 2021, 1:43 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசானது புதிய வார இறுதி விடுமுறை நாட்களை அறிவித்துள்ள நிலையில், அமீரகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அமீரக அரசு அறிவித்துள்ள சமீபத்திய வேலை நாட்களை பின்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் கல்வி நிறுவனங்கள் நான்கரை நாட்கள் வேலை நாட்களை பின்பற்றி வெள்ளிக்கிழமை பிற்பகல், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டரை நாட்களை விடுமுறை நாட்களாக பின்பற்றப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்களும் வாரத்திற்கு இரண்டரை நாட்கள் விடுமுறை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் பள்ளிகளும் அரசு அறிவித்துள்ள வேலை நாட்களையே பின்பற்றும் என கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து, “வேலை நாட்கள் குறித்த சமீபத்திய ஐக்கிய அரபு அமீரக அரசின் முடிவின்படி துபாயில் தனியார் கல்வித் துறை திறக்கப்படும். சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்றுவோம்” என்று துபாயின் கல்வி ஒழுங்குமுறை அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) ட்வீட் செய்துள்ளது.

அதேபோல் அபுதாபியில் உள்ள கல்வி மற்றும் அறிவுத் துறை (ADEK) அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிகளின் முதல்வர்களை தொடர்பு கொண்டு வார இறுதி விடுமுறையை மாற்றுவது தொடர்பான புதிய கொள்கை குறித்து அவர்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்த முடிவானது அபுதாபியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் இது குறித்த கூடுதல் விபரங்களை பள்ளி முதல்வர்கள் தெரிவிப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருத்தப்பட்ட வேலை நாட்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.