ADVERTISEMENT

UAE: உலகில் முதன்முறையாக வாரத்திற்கு நான்கரை நாட்கள் மட்டுமே வேலை… வேலை நேரம் என்ன…??

Published: 8 Dec 2021, 3:36 AM |
Updated: 8 Dec 2021, 4:30 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசானது செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மதியம், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டரை நாட்கள் ஊழியர்களுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய வார விடுமுறை மூலம் அமீரகத்தில் வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து மத்திய அரசு துறைகளும் ஜனவரி 1, 2022 முதல் இந்த புதிய வார விடுமுறை நாட்களுக்கு மாறும். இந்த நடவடிக்கையின் மூலம், உலகளவில் வாரத்தின் ஐந்து நாள் வேலை நாட்களை விட குறைவான தேசிய வேலை நாட்களை அறிமுகப்படுத்திய முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமீரக கல்வித்துறையும் அரசின் இந்த புதிய வேலை நாட்களை பின்பற்றும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கும் வாரத்திற்கு இரண்டரை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இருக்கக்கூடிய தனியார் துறை நிறுவனங்களும் அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப விடுமுறை நாட்களை மாற்றியமைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நான்கரை நாட்களுக்கான வேலை நேரங்களை அரசு பின்வருமாறு வகுத்துள்ளது.

ADVERTISEMENT

வேலை நேரம்

வேலை நாட்கள் வேலை நேரம்
திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 வரை
வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை