ADVERTISEMENT

UAE: முதன் முறையாக வாராந்திர டிரா நடத்திய பிக் டிக்கெட்… 1 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்…

Published: 10 Dec 2021, 8:52 AM |
Updated: 10 Dec 2021, 8:54 AM |
Posted By: admin

அமீரகத்தில் மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் அபுதாபி பிக் டிக்கெட் ராஃபிளில் முதன் முறையாக வாராந்திர மில்லினியர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டிசம்பர் 9, வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர குலுக்கலில் இந்தியாவை சேர்ந்த ஹாருண் ஷேக் என்பவர் வெற்றி பெற்று 1 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என் வாழ்வில் இதற்கு முன்பு நான் எதையும் வென்றதில்லை. முதன் முதலாக பிக் டிக்கெட், எனது டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து என் வாழ்க்கையை மாற்றியமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பிக் டிக்கெட் தொகுப்பாளரான ரிச்சர்ட், ஷேக் வேலை முடிந்து திரும்பும் நேரத்தில் அவரது காருக்கருகிலேயே காத்திருந்து 1 மில்லியன் திர்ஹம் காசோலையை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில், டிசம்பரில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் 1 மில்லியன் திர்ஹம் வெல்வார் என்று பிக் டிக்கெட் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதில் முதலாவது வாராந்திர டிரா டிசம்பர் 9 அன்று நடைபெற்று, ஷேக்கின் வெற்றிக்கான டிக்கெட்டை பிக் டிக்கெட் தேர்வு செய்துள்ளது. அடுத்த வாராந்திர டிராவானது டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் அடுத்த ஜனவரி 3, 2022 அன்று நடைபெறும் மாதாந்திர டிராவில் வெற்றி பெறும் முதல் நபருக்கு 25 மில்லியன் திர்ஹம், இரண்டாம் பரிசாக 2 மில்லியன் திர்ஹமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.