ADVERTISEMENT

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!! கடந்த ஒரு நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

Published: 14 Dec 2021, 10:21 AM |
Updated: 14 Dec 2021, 11:19 AM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில வாரங்களாகவே குறைவான கொரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில் ஒரு சில நாட்களாக நோய்த்தொற்றின் எண்ணிக்கையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஒரு சில மாதங்களாகவே 100 க்கும் கீழாகவே தினசரி கொரோனா தொற்று பதிவாகி வந்தது. ஆனால் தற்பொழுது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கடந்த ஒரு நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 743,004 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவிற்கு கடந்த ஒரு நாளில் யாரும் பலியாகவில்லை. இதனையொட்டி அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,151 ஆக இருக்கின்றது.

ADVERTISEMENT

அத்துடன் புதிதாக 82 பேர் கொரோனா பாதித்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர். இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்து முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 738,049 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.