அமீரகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றானது 100 க்கும் கீழாகவே பதிவாகி வந்த நிலையில் ஒரு சில நாட்களாக மீண்டும் நோய்தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, டிசம்பர் 16, 2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 200 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 743,352 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,151 ஆக இருக்கின்றது.
கடந்த ஒரு நாளில் மட்டும் 119 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 738,260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.