ADVERTISEMENT

துபாய்: ஒரு முறை அல்ல.. 8 முறை வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்கவுள்ள குளோபல் வில்லேஜ்..!!

Published: 19 Dec 2021, 5:47 AM |
Updated: 19 Dec 2021, 5:47 AM |
Posted By: admin

புதிய ஆண்டான 2022 ம் வருடம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த வருட புத்தாண்டை துபாயில் உள்ள குளோபல் வில்லேஜ் வித்தியாசமாக வரவேற்க திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் வானவேடிக்கைகளுக்கும் உலகளவில் புகழ் பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு இரவின் நள்ளிரவு 12 மணியளவில் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களிலும் கண்கவர் வான வேடிக்கைகள் நடக்கும் என்பது நாம் அனைவரும் தெரிந்ததே.. ஆனால் குளோபல் வில்லேஜ், வரக்கூடிய 2022-ம் ஆண்டை வித்தியாசமான முறையில் எட்டு வானவேடிக்கைகளுடன் இந்த புத்தாண்டை வரவேற்க உள்ளது. மேலும் பார்வையாளர்களை மகிழ்விக்க புத்தாண்டு இரவு முழுவதும் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2021 ம் வருடத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று மாலை முதலே குளோபல் வில்லேஜில் புத்தாண்டு வான வேடிக்கைகளை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். அதாவது அமீரகத்திற்கும் மற்ற பிற நாடுகளுக்கும் இடையே கால நேரம் மாறுபடும் என்பதால் அதற்கேற்ப புத்தாண்டு கொண்டாட்டங்களை குளோபல் வில்லேஜ் தொடங்கவுள்ளது. அதாவது இந்தியாவில் நள்ளிரவு 12 மணி புத்தாண்டு தொடங்குவதை இங்கும் கொண்டாடும் விதமாக குளோபல் வில்லேஜிலும் இரவு 10.30 மணிக்கு வான வேடிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

>> முதலாவதாக, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு தொடங்கும்போது அதனை குறிக்கும் விதமாக அமீரக நேரப்படி மாலை 5 மணிக்கு இங்கும் வானவேடிக்கை நடைபெறும்.

>> இரண்டாவதாக, பிலிப்பைன்ஸில் புத்தாண்டு தொடங்கும்போது அதனை குறிக்கும் விதமாக அமீரக நேரப்படி இரவு 8 மணிக்கு இங்கும் வானவேடிக்கை நடைபெறும்.

ADVERTISEMENT

>> மூன்றாவதாக, தாய்லாந்தில் புத்தாண்டு தொடங்கும்போது அதனை குறிக்கும் விதமாக அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு இங்கும் வானவேடிக்கை நடைபெறும்.

>> நான்காவதாக, பங்களாதேஷில் புத்தாண்டு தொடங்கும்போது அதனை குறிக்கும் விதமாக அமீரக நேரப்படி இரவு 10 மணிக்கு இங்கும் வானவேடிக்கை நடைபெறும்.

>> ஐந்தாவதாக, இந்தியாவில் புத்தாண்டு தொடங்கும்போது அதனை குறிக்கும் விதமாக அமீரக நேரப்படி இரவு 10.30 மணிக்கு இங்கும் வானவேடிக்கை நடைபெறும்.

>> ஆறாவதாக, பாகிஸ்தானில் புத்தாண்டு தொடங்கும்போது அதனை குறிக்கும் விதமாக அமீரக நேரப்படி இரவு 11 மணிக்கு இங்கும் வானவேடிக்கை நடைபெறும்.

>> ஏழாவதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஐந்து நிமிட நீண்ட கண்கவர் வான வேடிக்கை நடைபெறும்.

>> எட்டாவதாக, ரஷ்யாவில் புத்தாண்டு தொடங்கும்போது அதனை குறிக்கும் விதமாக அமீரக நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இங்கும் வானவேடிக்கை நடைபெறும்.

குளோபல் வில்லேஜில் வானவேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கிடையே பார்வையாளர்கள் 26 நாட்டு அரங்குகளில் ஷாப்பிங் செய்யலாம் என்றும் ஸ்டண்ட் ஷோ, ஹார்பர் ஃபோர்ஸ் மற்றும் எல்லா வயதினரையும் ஈர்க்கக்கூடிய கார்னவலின் துடிப்பான 170 க்கும் மேற்பட்ட ரைடுகள், விளையாட்டுகள் மற்றும் வேடிக்கை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

குளோபல் வில்லேஜின் பொழுதுபோக்கு இயக்குனர் ஷான் கார்னெல் கூறுகையில்: “2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு இரவை, உலகத்துடன் சேர்ந்து கொண்டாட நாங்கள் எண்ணுகிறோம். புத்தாண்டு இரவு முழுவதும், பார்வையாளர்கள் கண்கவர் பட்டாசு வான வேடிக்கைகளை ஒருமுறை மட்டுமில்லாமல், எட்டு முறை வான வேடிக்கைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் கண்டு மகிழ்வார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தவறவிட விரும்பாத புத்தாண்டு விருந்து இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புத்தாண்டு இரவான டிசம்பர் 31 ம் தேதி பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும். நுழைவு வாயில்கள் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் மறுநாள் அதிகாலை 2 மணி வரை நடைபெறும் என்றும் குளோபல் வில்லேஜ் நிர்வாகத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.