ADVERTISEMENT

UAE: தனியார் துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்தின் முதல் விடுமுறையை அறிவித்த அரசு…

Published: 19 Dec 2021, 1:28 PM |
Updated: 19 Dec 2021, 1:31 PM |
Posted By: admin

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு புத்தாண்டு விடுமுறை தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி 1, 2022 சனிக்கிழமை தனியார் துறைக்கு விடுமுறை என்று அமீரகத்தின் மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்க மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையம், ஜனவரி 1 ஆம் தேதி அரசாங்கத் துறைக்கு விடுமுறை என்று அறிவித்தருந்ததை தொடர்ந்து தற்பொழுது தனியார் துறைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஜனவரி 1, 2022 முதல், சனி, ஞாயிறு மற்றும் வெள்ளி அரை நாள் புதிய வார இறுதி விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 31 வெள்ளிக்கிழமையில் வருகிறது. இது இன்னும் 2021 இல் இருப்பதால், அந்த நாள் அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும். ஜனவரி 1ம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை.அடுத்த ஆண்டு புதிய வார விடுமுறைப்படி ஜனவரி 2 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை ஆகும்.

ADVERTISEMENT

இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் சில தனியார் துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 2 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.