ADVERTISEMENT

2022 ம் ஆண்டு ரமலான் துவங்கவிருக்கும் தேதியை கணித்த வானியலாளர்கள்.. எப்போது…??

Published: 23 Dec 2021, 9:08 AM |
Updated: 23 Dec 2021, 9:32 AM |
Posted By: admin

2021 ம் வருடமானது தனது இறுதிக்கட்டத்தை அடைந்து 2022 ம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் துவங்கவிருக்கின்றது. இந்நிலையில், 2022 ம் ஆண்டு ரமலான் துவங்கும் தேதியை வானியலாளர்கள் கணித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

எகிப்தின் வானியல் மற்றும் புவி இயற்பியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் படி, ரமலான் ஏப்ரல் 2, 2022 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய மாதமான ஷபானின் 29 ஆம் தேதியான ஏப்ரல் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை ரமலான் பிறை தெரியும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி, ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர்.

ஏப்ரல் 1 ஆம் தேதி சூரியன் மறைவிற்குப் பிறகு பிறையை மக்கள் சாதாரணமாக பார்த்தாலே தெரியும் என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை நோன்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பு நோற்கக் கூடிய காலமாகும்.

ரமலான் மாதம் முடிந்ததும் உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாளை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இருப்பினும் ரமலான் மாதம் துவங்கவிருக்கும் தருணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு ரமலான் மற்றும் ஈத் அல் பித்ரின் அதிகாரப்பூர்வ தொடக்க தேதிகளை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.