ADVERTISEMENT

அமீரகத்தில் 10 நாட்களில் 100 லிருந்து 1,600 க்கும் மேல் பதிவாகிய கொரோனா பாதிப்பு…!!

Published: 25 Dec 2021, 10:14 AM |
Updated: 25 Dec 2021, 10:16 AM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அமீரகத்தில் கடந்த பத்தே நாட்களில் 100 இலிருந்து 1600 க்கும் மேல் தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, டிசம்பர் 25, 2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,621 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 749,530 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு  ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  2,156 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஒரு நாளில் மட்டும் 585 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 740,707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி பயணிப்பவர்களுக்கு EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு நிறுவனங்களுக்கு செல்ல PCR விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT