ADVERTISEMENT

அபுதாபிக்குள் நுழைய PCR, கிரீன் பாஸ் கட்டாயம்.. மீண்டும் அமலுக்கு வரும் நுழைவு விதிமுறைகள்.. டிசம்பர் 30 முதல் அமல்..!!

Published: 28 Dec 2021, 8:48 AM |
Updated: 28 Dec 2021, 8:53 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபுதாபியில் உள்ள அதிகாரிகள் இன்று செவ்வாயன்று அபுதாபிக்குள் நுழைவதற்கான புதுப்பிக்கப்பட்ட நுழைவுத் தேவைகளை அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி பேரிடர் மேலாண்மை குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற எமிரேட்களிலிருந்து அபுதாபிக்குள் நுழைய விரும்பும் கோவிட் 19 தடுப்பூசி பெற்ற நபர்கள் Al Hosn செயலியில் கிரீன் பாஸ் நிலையைக் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே போன்று, இது வரையிலும் தடுப்பூசி போடப்படாதவர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கு 96 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட PCR சோதனையின் எதிர்மறை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி அதிகாரிகள் அறிவித்திருக்கும் இந்த புதிய நடவடிக்கைகள் வரும் டிசம்பர் 30, வியாழன் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மேலும் கோவிட்-19 பாதிப்புகளை விரைவாகக் கண்டறிய EDE ஸ்கேனர்களின் பயன்பாடும் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT