ADVERTISEMENT

UAE: ரமலான், நோன்பு பெருநாள் துவங்கும் நாளை கணித்த வானியலாளர்… குடியிருப்பாளர்களுக்கு விடுமுறை எப்போது..??

Published: 5 Jan 2022, 7:10 AM |
Updated: 5 Jan 2022, 8:06 AM |
Posted By: admin

வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல்-ஜர்வான் கருத்துப்படி, புனித ரமலான் மாதம் ஏப்ரல் 2, 2022 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரமலான் என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் 9 வது மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டி ஆண்டின் 6 வது மாதமான ஜமாதுல் ஆஹிரா ஜனவரி 4, 2022 செவ்வாய் அன்று தொடங்கும் என்று அல்-ஜர்வான் முன் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இதனையொட்டி  ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் திங்கள், மே 2, 2022 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக விடுமுறை நாட்காட்டியின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை ஈத் அல் பித்ர் விடுமுறை இருக்கும்.

இருப்பினும் இந்த நாட்கள் பிறை பார்ப்பதைப் பொறுத்து அதிகாரப்பூர்வமாக தீர்மாணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT