ADVERTISEMENT

UAE: 2022 ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு..!! அடுத்து வரவிருக்கும் விடுமுறை என்ன…??

Published: 6 Jan 2022, 12:31 PM |
Updated: 6 Jan 2022, 12:41 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு வருடத்தின் முதல் பொது விடுமுறையான புத்தாண்டு கடந்து சென்று விட்டது. எல்லா வருடங்களைப் போலவே இந்த வருடமும் ஒரே மாதிரியான மற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் விடுமுறை உள்ள போதிலும் அமீரகத்தில் இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய வேலை நாட்களினால் விடுமுறையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம்.

ADVERTISEMENT

இந்த வருடம் அடுத்து வரவிருக்கும் விடுமுறையானது ஈத் அல் பித்ருக்காக மே 2, 2022 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மற்றும் தனியார் துறைகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அரசாங்க உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது.

ADVERTISEMENT

2022க்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது விடுமுறை நாட்களின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை: ஈத் அல் பித்ர் (ஈத் திங்கள், மே 2, 2022 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது)

ADVERTISEMENT

துல் ஹஜ் 9: அரஃபா நாள்

துல் ஹஜ் 10 முதல் 12 வரை: ஈத் அல் அத்ஹா

ஜூலை 30: இஸ்லாமிய புத்தாண்டு

அக்டோபர் 8: மீலாது நபி

டிசம்பர் 1: தியாகிகள் நினைவு தினம்

டிசம்பர் 2 மற்றும் 3: ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்