ADVERTISEMENT

அபுதாபியில் பார்க்கிங் கட்டணம், டோல் கேட் செயல்படும் நேரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ITC..!!

Published: 12 Jan 2022, 5:35 PM |
Updated: 12 Jan 2022, 5:35 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய வார விடுமுறை நாட்கள் அமலுக்கு வந்திருந்தாலும் அபுதாபியின் வாகன நிறுத்தத்திற்கான கட்டண பார்க்கிங் (Mawaqif) மற்றும் டோல் கேட் (Darb) செயல்படும் நேரங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து பழைய நடைமுறைகளே பின்பற்றப்படும் என்று ITC தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) இது பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “புதிய வார வேலை நாட்கள் முறையின் போது திட்டமிடப்பட்ட எங்கள் சேவைகளை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். Mawaqif மற்றும் Darb சேவைகள் மறுஅறிவிப்பு வரும் வரை வழக்கமான அட்டவணைப்படி தொடர்ந்து செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும்” என குறிப்பிட்டுள்ளது.

>> Darb டோல் கேட் அமைப்பு சனிக்கிழமை முதல் வியாழன் வரை போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரங்களான காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டண நேரமாக செயல்படும்.

ADVERTISEMENT

>> இந்த நேரங்களில் Darb டோல் கேட்டை கடந்து செல்லும் வாகனங்கள் 4 திர்ஹம்ஸ் சுங்க கட்டணமாக செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வழக்கம் போல் கட்டணம் இல்லாமல் இருக்கும்.

>> Mawaqif ஆனது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மறு அறிவிப்பு வரும் வரையிலும் இதே நேரத்தில் கட்டண பார்க்கிங் செயல்பாட்டில் இருக்கும்.

ADVERTISEMENT

>> ITC இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

>> அபுதாபிக்குள் இயங்கக்கூடிய பொதுப் பேருந்துகள் மற்றும் ஃபெர்ரி போக்குவரத்துகள் அவற்றின் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும்.