ADVERTISEMENT

அமீரகம் பயணிக்கவிருக்கிறீர்களா..?? GDRFA, ICA முன் அனுமதி, PCR சோதனை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இங்கே..!!

Published: 15 Jan 2022, 7:11 AM |
Updated: 15 Jan 2022, 8:52 AM |
Posted By: admin

உலகெங்கிலும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்றானது அதிகமாக இருப்பதால் அரசு நெறிமுறைகளை இன்னும் கடுமையாக்கியுள்ளது.

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பவராக இருந்தால் உங்களுக்கான முழு பயண நெறிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அபுதாபி (எதிஹாட் ஏர்வேஸ் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)

ICA ஸ்மார்ட் டிராவல் சேவை மூலம் பதிவு செய்தல்

அமீரக குடிமக்களை தவிர்த்து, குடியிருப்பாளர்கள் அனைவரும் விமானத்தில் பயணிப்பதற்கு முன் ICA ஸ்மார்ட் டிராவல் சேவை மூலம் பதிவு செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் நீங்கள் பயணிக்கும் முன் எந்த நேரத்திலும் இதில் பதிவு செய்யலாம். தடுப்பூசி சான்றிதழை நீங்கள் பதிவேற்ற வேண்டியதில்லை.

ADVERTISEMENT

அமீரகத்திற்கு வெளியே முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் விமானத்தில் பயணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவுசெய்ததும், மின்னஞ்சல் மூலம் QR குறியீட்டைப் பெறுவீர்கள்.

கொரோனா சோதனை:

விமான பயணத்திற்கு முன்பு பயணிகள் கொரோனாவிற்கான எதிர்மறை PCR சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும். அபுதாபி உங்கள் இறுதி இலக்காக இருந்தால், உங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் இந்த சோதனை செய்திருக்க வேண்டும். டிரான்சிட் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை அவசியம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானம் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ரேபிட் PCR சோதனையும் தேவைப்படுகிறது.

அபுதாபி வந்தவுடன் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சோதனை

>> பசுமைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபி விமான நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு அபுதாபி வந்தவுடன் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும்.

>> அவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை.

>> ஆறாம் நாள் மீண்டும் சோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

>> பசுமைப் பட்டியலில் இல்லாத இந்தியா போன்ற வேறு எந்த இடத்திலிருந்தும் அபுதாபி விமான நிலையத்திற்கு வருகை புரியும் நபர்கள் அபுதாபி வந்தவுடன் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

>> அவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை.

>> நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் சோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

துபாய் (எமிரேட்ஸ் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)

GDRFA/ICA ஒப்புதல்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சூடானில் இருந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டும் GDRFA அல்லது ICA அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

புதிதாக வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் அல்லது எம்ப்ளாய்மெண்ட் விசா, 10 ஆண்டு அமீரக கோல்டன் விசா, முதலீட்டாளர் அல்லது பங்குதாரர்கள் விசா, விசிட் விசா போன்ற பிற விசாக்களைக் கொண்ட பயணிகளுக்கு GDRFA ஒப்புதல் தேவையில்லை.

PCR சோதனை

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் எதிர்மறையான முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட ரேபிட் PCR சோதனையின் எதிர்மறையான முடிவையும் வழங்க வேண்டும்.

அனைத்து நாடுகளிலிருந்தும் (GCC உட்பட) துபாய்க்குப் பயணிக்கும் பயணிகள், புறப்படுவதற்கு 48-72 மணிநேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் எதிர்மறையான முடிவைப் பெற்றிருக்க வேண்டும்.

ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா (ஏர் அரேபியா இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)

ICA ஸ்மார்ட் டிராவல் சேவை மூலம் பதிவு செய்தல்

புதிதாக வழங்கப்பட்ட இ-விசாவுடன் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு முன் பதிவு செய்ய வேண்டும்.

ஷார்ஜாவிற்கு பயணிக்கும் அபுதாபி ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நுழைவு நிலையை சரிபார்க்க விமானத்தை முன்பதிவு செய்வதற்கு முன் uaeentry.ica.gov.ae ஐப் பார்வையிட வேண்டும். ஷார்ஜா அல்லது வேறு எமிரேட்டில் வழங்கப்படும் விசாக்களுக்கு முன் அனுமதி தேவையில்லை.

PCR சோதனை

இந்தியா, பாகிஸ்தான், கென்யா, நேபாளம், பங்களாதேஷ், உகாண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட PCR சோதனையின் எதிர்மறையான முடிவைப் பெற வேண்டும்.

அவர்கள் புறப்படுவதற்கு முன் ஆறு மணி நேரத்திற்குள் விமான நிலையத்தில் ரேபிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அனைத்து பயணிகளும் அமீரகம் வந்தவுடன் சோதனை செய்யப்படுவார்கள். ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.