ADVERTISEMENT

துபாயில் தனது டிரைவ்-த்ரூ சோதனை மையத்தை நிரந்தரமாக மூடிய SEHA…!!

Published: 16 Jan 2022, 5:54 AM |
Updated: 16 Jan 2022, 8:15 AM |
Posted By: admin

அபுதாபியை சேர்ந்த சுகாதார நிறுவனமான சேஹா (SEHA), துபாயின் மினா ரஷீத்தில் செயல்பட்டு வந்த தனது கொரோனா டிரைவ்-த்ரூ சோதனை மையத்தை நிரந்தரமாக மூடியுள்ளது.

ADVERTISEMENT

இதனால் சேஹா மையங்களில் பரிசோதனை செய்ய விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் சிட்டி வாக் அல்லது அல் கவானீஜில் உள்ள டிரைவ்-த்ரூ மையங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் PCR சோதனைகளுக்கு 50 திர்ஹம் மட்டுமே செலவாகும் என்பதால், சேஹா மையங்களில் பரிசோதனைக்கான தேவை அதிகமாகவே இருக்கும்.

ADVERTISEMENT

இதன் காரணமாக பரிசோதனை செய்ய விரும்பும் நபர்கள் சேஹா செயலியில் தங்கள் அப்பாய்மெண்ட்டை பதிவு செய்யலாம். சேஹா சோதனை மையங்களின் முழு பட்டியல் அதன் இணையதளத்தில் கிடைக்கிறது.