ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் இரண்டரை இலட்சம் திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்…!!

Published: 18 Jan 2022, 5:29 PM |
Updated: 18 Jan 2022, 5:30 PM |
Posted By: admin

அபுதாபி பிக் டிக்கெட் நடத்திய வாராந்திர மின்னணு டிராவில் இந்தியாவைச் சேர்ந்த பெஞ்சமின் ஜான் 250,000 திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். அபுதாபியில் வசிக்கும் இவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பிக் டிக்கெட்டினை வெவல்வதற்காக முயற்சி செய்து வருவதாகவும், இறுதியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் இது பற்றி கூறுகையில், “கடந்த 40 மாதங்களாக டிக்கெட்டுகளை வாங்கி வந்த நான் இன்று பெரிய வெற்றியைப் பெற்றுள்ளேன்” என்று ஜான் கூறியுள்ளார்.

அபுதாபியில் இருக்கும் முஸாஃபாவில் வசிக்கும் இவர் 204094 என்ற எண் கொண்ட டிக்கெட்டை தனது நண்பர்களுடன் சேர்ந்து வாங்கியதாகவும் பரிசுப் பணத்தை வைத்து என்ன செய்வதென்பதை இதுவரை யோசிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஜானிற்கு இந்த பரிசுத்தொகையுடன் சேர்த்து பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறும் டிராவில் மெகா பரிசு 22 மில்லியன் திர்ஹம், இரண்டாம் பரிசு 1 மில்லியன் மற்றும் மூன்று பெரிய பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.