ADVERTISEMENT

அமீரகத்தின் இன்றைய வானிலை: மூடுபனி எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்…!!

Published: 30 Jan 2022, 7:19 AM |
Updated: 30 Jan 2022, 8:05 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை வானிலை தொடர்ந்து குளிராகவும், மேகமூட்டமாகவும் இருக்கும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காலையில் வானிலை மையத்தின் (NCM) மூலம் மூடுபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்றைய வானிலை முன்னறிவிப்பின்படி பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். இது இன்று இரவு மற்றும் திங்கள் காலை ஈரப்பதத்துடன் இருக்கும் என்றும், சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT