ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வெப்பநிலையானது கணிசமாக குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவும் என்று தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பின் படி அமீரகத்தில் வானிலை தூசி நிறைந்ததாகவும், பொதுவாக ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய இரவு மற்றும் திங்கள்கிழமை காலையில் சில உள் பகுதிகளில் குறிப்பாக அமீரகத்தின் கிழக்கு பகுதிகள் ஈரப்பதமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மிதமான முதல் வலுவாக வீசும் காற்றினால் தூசி மற்றும் மணல் காற்று வீசி கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அரேபிய வளைகுடாவில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், ஓமன் கடல் பகுதியில் கொந்தளிப்பாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரேபிய வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலை 6 மணி வரை 10 அடி உயர அலைகள் எழக்கூடும் என்பதால் வானிலை மையம் உயர் அலைகள் எச்சரிக்கையை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Fresh to Strong winds, reaching 55 Km/h and rough to very rough sea with wave height reaching 10 ft in the Arabian Gulf, from 18:00 today 05/02/2022 until 18:00 Sunday 06/02/2022. pic.twitter.com/xoazSVgPHZ
— المركز الوطني للأرصاد (@NCMS_media) February 5, 2022