ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல்…!!

Published: 13 Feb 2022, 10:02 AM |
Updated: 13 Feb 2022, 10:04 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பலத்த காற்று மற்றும் மேகமூட்டத்துடன், லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வானிலையானது அமீரகம் முழுவதும் திங்கள்கிழமை வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரேபிய வளைகுடாவில் இருந்து வீசும் காற்றினால் அமீரகத்தில் இந்த சீரற்ற வானிலை நிலவுவதாக வானிலை மையம் விளக்கமளித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என மையம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மேலும் ஓமன் கடல் சீற்றமாக இருக்கும் என்றும், துபாயில் வெப்பநிலை அதிகபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்சம் 19 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துபாயில் 35 முதல் 75 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியை பொறுத்தவரை, வெப்பநிலை அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், மேலும் 35 முதல் 80 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.