ADVERTISEMENT

UAE: 10 நாட்களுக்கு மூடப்படவுள்ள அபுதாபி-துபாய் இடையேயான முக்கிய சாலை…!! ITC அறிவிப்பு…!!

Published: 15 Feb 2022, 2:09 PM |
Updated: 15 Feb 2022, 2:20 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் பின் சுல்தான் சாலை (E10) நாளை முதல் 10 நாட்களுக்கு பகுதியளவு மட்டும் மூடப்படும் என்று அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் நோக்கி செல்லும் இந்த முக்கிய சாலையின் வலது பாதை மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பகுதியளவு மூடலானது நாளை, பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


அபுதாபியில் இருந்து துபாய்க்கு வாகனம் ஓட்டும்போது அல் ரஹா ஷாப்பிங் மாலை அடுத்து வலது பக்கம் எதிஹாத் பிளாசா உள்ள பகுதியில் இந்த சாலை மூடல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஓட்டுமாறும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் ITC வலியுறுத்தியுள்ளது.