ADVERTISEMENT

UAE: இனி உங்கள் காலி பாட்டில்களில் இலவசமாக தண்ணீர் நிரப்பிக்கொள்ளலாம்… துபாய் இளவரசரின் புதிய திட்டம்… எங்கெல்லாம் இந்த வசதி…??

Published: 17 Feb 2022, 9:26 AM |
Updated: 17 Feb 2022, 9:36 AM |
Posted By: admin

துபாயில் வசிக்கும் மக்கள் இனி தங்களின் காலியான தண்ணீர் பாட்டில்களில் இலவசமாக மீண்டும் தண்ணீரை நிரப்பிக்கொள்ளலாம். இதற்காக “துபாய் கேன்” எனும் ஒரு புதிய திட்டமானது துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கி நகரும் நிலையில், துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் துபாய் கேன் முயற்சியை துபாய் முழுவதும் தொடங்கியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டிருக்கும் புதிய வாட்டர் ஸ்டேஷன், குடியிருப்பாளர்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக காலி தண்ணீர் பாட்டில்களில் புதிய குடிநீரை மீண்டும் நிரப்ப அனுமதிக்கும்.

ADVERTISEMENT

தற்பொழுது துபாய் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வாட்டர் ஸ்டேஷன் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் 50 இடங்களில் வாட்டர் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1,000க்கும் மேற்பட்ட வாட்டர் ஸ்டேஷன்கள் நிறுவப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் இதனை நிறுவ ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்குள் பிளாஸ்டிக் பைகளை தடை செய்யும் நோக்கில் ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு 25 ஃபில்ஸ் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதாக அரசு அறிவித்ததை அடுத்து ‘துபாய் கேன்’ திட்டமானது தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, சராசரியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் ஆண்டுக்கு 450 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துகிறார் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சியானது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க சமூகத்தை ஊக்கப்படுத்துகிறது.

காலி பாட்டில்களில் தண்ணீரை எங்கே சென்று நிரப்புவது?

துபாயில் உள்ள பின்வரும் பகுதிகளில் காலி்பாட்டில்களில் தண்ணீரை நிரப்புவதற்கான வாட்டர் ஸ்டேஷன் நிறுவப்பட்டுள்ளன. அவை

1. A4 ஸ்பேஸ்

2. அல் ஃபாஹிதி ஹிஸ்டோரிகல் நெய்பர்ஹூட்

3. அல் சீஃப்

4. அல் ஷிந்தகா ஹிஸ்டோரிகல் டிஸ்ட்ரிக்ட்

5. அல் இத்திஹாத் பார்க

6. புளூவாட்டர்ஸ் ஐலேண்ட்

7. புர்ஜ் பார்க்

8. சிட்டி வாக்

9. சிட்டி சென்டர் தேரா

10. DMCC மெட்ரோ ஸ்டேஷன்

11. டிராகன் மார்ட்

12. துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி

13. துபாய் ஹார்பர்

14. துபாய் மெரினா அல் கர்பி ஸ்ட்ரீட்

15. துபாய் மெரினா மால்

16. துபாய் மெரினா ப்ரொமினேட்

17. துபாய் மெரினா வாக்

18. துபாய் வேர்ல்ட் ட்ரேடு சென்டர்

19. எக்ஸிக்யூடிவ் டவர்ஸ்

20. கோல்ட் சூக் – தேரா

21. எக்ஸ்போ 2020

22. JLT பார்க்

23. கைட் பீச்

24. லா மெர்

25. மதீனத் ஜுமேரா

26. மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ ஸ்டேஷன்

27. குரானிக் பார்க்

28. ஸ்கைடைவ் துபாய்

29. தி பீச்

30. தி கிரீன்ஸ் & வியூஸ்

31. பாம் வெஸ்ட் பீச்

32. ஜபீல் பார்க்

33. அல் குபைபா மெட்ரோ ஸ்டேஷன்

34. அல் பர்ஷா பாண்ட் பார்க்