ADVERTISEMENT

UAE: 3,300 திர்ஹம்ஸிற்கு டெக்னீசியனாக பணிபுரிந்த இந்தியருக்கு அடித்த 12 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்…!!

Published: 4 Mar 2022, 8:02 AM |
Updated: 4 Mar 2022, 4:06 PM |
Posted By: admin

அபுதாபியில் நடந்த சமீபத்திய பிக் டிக்கெட் டிராவில் துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 12 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். 3-ம் தேதி நடைபெற்ற இந்த டிராவில் 192202 என்ற டிக்கெட்டை வைத்திருந்த முகமது சமீர் ஆலன் என்பவர் மெகா பரிசான 12 மில்லியனை தட்டிச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

மாதம் 3,300 திர்ஹம்கள் சம்பாதிக்கும் டெக்னீசியனான சமீர், வெற்றி பெற்ற தொகையை ஆறு பேருடன் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், அவர் 500 திர்ஹம் டிக்கெட் விலையில் பாதியை செலுத்தியதால் அவருக்கு வெற்றி பெற்ற 12 மில்லியன் திர்ஹமில் 6 மில்லியன் திர்ஹம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் இந்த தொகையை வைத்து என் மனைவியை துபாய்க்கு அழைத்து வர விரும்புகிறேன். எனது வயதான பெற்றோருக்கும் உதவ விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

முன்பு இந்தியாவில் விவசாயம் செய்து வந்த சமீர், தனது வெற்றித் தொகையில் சிலவற்றை இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் விவசாயத்தில் முதலீடு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிக் டிக்கெட்டில் ஒவ்வொரு மாதம் 3 ம் தேதி நடைபெறும் டிரா இந்த மாதம் முடிவடைந்தாலும் இந்த மாதம் நடைபெறும் வாராந்திர டிராவில் வெல்பவர்களுக்கு 3 இலட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT