ADVERTISEMENT

வருடத்திற்கு இருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்வு.. ஒரு நாளின் சமமான பகல், இரவு நேரங்களை எதிர்கொள்ளும் குவைத்…!!

Published: 4 Mar 2022, 6:49 PM |
Updated: 4 Mar 2022, 6:57 PM |
Posted By: admin

ஒரு நாளில் 24 மணி நேரம் என இருந்தாலும் சமமான பகல், இரவு நேரங்கள் எப்பொழுதாவதுதான் வரும். குளிர் காலத்தில் இரவு நீளமானதாகவும் கோடை காலத்தில் பகல் நீளமானதாக இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது போல பகல், இரவு சமமாக இருக்கும் ஒரு நாளை குவைத் எதிர்கொள்ளவிருக்கிறது.

ADVERTISEMENT

வரும் மார்ச் 16 ம் தேதி குவைத்தில் 12 மணி நேரம் பகல் மற்றும் 12 மணி நேர இரவு என சரியாக ஒரு நாளின் 24 மணி நேரங்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குவைத்தின் அல் ஒஜைரி அறிவியல் மையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் மார்ச் 16 ம் தேதி புதன்கிழமை அன்று குவைத்தில் சூரியன் காலை 5.57 மணிக்கு உதித்து மாலை 5.57 மணிக்கு மறையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வெப்பநிலை பகல் நேரங்களில் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம அளவு பகல், இரவு நேரங்கள் வருடத்திற்கு இரு முறை மட்டுமே நிகழும் என்றும் முதலாவது மார்ச் மாதத்திலும் இரண்டாவது செப்டம்பர் மாதத்திலும் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT