ADVERTISEMENT

UAE: போக்குவரத்தை மேம்படுத்த “AD Express” எனும் புதிய Nonstop பேருந்து சேவை அறிமுகம்…!! பயணிகள் எங்கெல்லாம் இந்த சேவையை பெறலாம்…??

Published: 12 Mar 2022, 6:02 AM |
Updated: 12 Mar 2022, 8:17 AM |
Posted By: admin

அபுதாபியில் வசிக்கும் மக்களின் பொது போக்குவரத்தை இன்னும் எளிதாக்கும் வகையில் அபுதாபி எக்ஸ்பிரஸ் எனும் புதிய பேருந்து சேவையானது, அபுதாபி முழுவதும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும் என்று உள்ளூர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி முழுவதும் விரைவான பேருந்து போக்குவரத்தை வழங்கும் இந்த நேரடி மற்றும் இடைநில்லா பேருந்து சேவை தனியார் துறை ஆபரேட்டர்களால் வழங்கப்படும் என்று நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துதல், பன்முகப்படுத்துதல் மற்றும் சமூகத்திற்கு அதிக விருப்பங்களை வழங்குதல் ஆகிய முயற்சிகளுக்கு ஏற்ப இந்த முயற்சி அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த புதிய சேவை இரண்டு கட்டங்களாக பயணிகளுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதலாவது முசாஃபா தொழில்துறை பகுதி (Mussafah industrial area) மற்றும் முகமது பின் சையத் சிட்டியை (Mohamed bin zyed city) உள்ளடக்கும் என்றும், இரண்டாவதாக கலிஃபா சிட்டி, பனி யாஸ், அல் ஷஹாமா, அல் ஃபலாஹ் மற்றும் பயணிகளின் தேவைக்கேற்ப இதர பகுதிகளை உள்ளடக்கி, இந்த பகுதிகளை நேரடியாக அபுதாபி சிட்டியுடன் நான்கு நேரடி செயல்பாட்டு வழிகள் மூலம் இணைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில், அல் ஹயர் (al hiyar), அல் ஃபக்கா (al faqa), ஸ்வீஹான் (sweihan), அல் ஷிவேய்ப் (al shiwayb), நஹில் (nahil), அபு சம்ரா (abu samra), அல் விகான் (al wiqan), அல் குவா பகுதிகள் மற்றும் அல் அய்னின் பல்வேறு பகுதிகளில் நேரடி மற்றும் விரைவான சேவையை வழங்கும் ஐந்து புதிய வழித்தடங்களையும் ITC சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஒவ்வொரு வாரமும் மொத்தம் 680 பயணங்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து சேவைகளும் அபுதாபி சிட்டியின் பிரதான பேருந்து நிலையத்தை ஒரு வருகைப் புள்ளியாகப் பயன்படுத்தும் மற்றும் முசாஃபாவில் உள்ள அபுதாபியின் தொழில் நகரத்திலிருந்து (ICAD) E-01 சேவையும், முசாஃபாவிலிருந்து நேரடியாக E-02 சேவையும், முசாஃபா டவுன் பஸ் டெர்மினலில் இருந்து இயக்கப்படும் E-03 சேவையும் மற்றும் கடைசியாக கலீஃபா சிட்டியில் உள்ள சஃபீர் மாலில் இருந்து புறப்படும் E-04 சேவையும் இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் வார நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் இந்த சேவை கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மற்ற நேரங்களில் ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் இடையே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கும் ITC மற்றும் தனியார் துறைக்கு இடையேயான மூலோபாய கூட்டுறவின் ஒரு பகுதியாக, அல் கசல் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் (al ghazal transport company) மற்றும் எமிரேட்ஸ் டாக்ஸி மூலம் முதல் கட்டம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சேவையை வழங்குவதற்காக நிறுவனங்கள் 64 பேருந்துகளை வாங்கியுள்ளன.

“இந்தச் சேவையின் தொடக்கமானது பொதுப் போக்குவரத்து சேவைகளை இயக்கும் நிறுவனங்களுக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பொது-தனியார் கூட்டாண்மையை உறுதிப்படுத்துகிறது” என்று ITC கூறியுள்ளது.