ADVERTISEMENT

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு ரமலான் மாத வேலை நேரங்கள் அறிவிப்பு..!!

Published: 15 Mar 2022, 2:47 PM |
Updated: 15 Mar 2022, 2:49 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களின் வேலை நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டு குறுகிய வேலை நேரங்களை பின்பற்றுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வரிசையில் இந்த வருட ரமலான் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தனியார் துறை நிறுவனங்கள் செல்படும் நேரங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் மனித வள மற்றும் எமிராடிசேஷன் அமைச்சகம் இந்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக அரசுத்துறை நிறுவனங்களுக்கு குறுகிய வேலை நேரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதில் அரசுத்துறை நிறுவனங்கள் வார நாட்களில் (திங்கள் முதல் வியாழன் வரை) காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்கும் என்றும் அரை வேலை நாளான வெள்ளிக்கிழமைகளில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி தனியார் நிறுவனங்கள் தினந்தோறும் வழக்கமாக செயல்படும் நேரங்களில் இருந்து இரண்டு மணி நேரம் குறைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வானியல் கணக்கீட்டின்படி ரமலான் மாதம் வரும் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ADVERTISEMENT