ADVERTISEMENT

மோசமான வானிலையால் அமீரகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து..!! மாலுமிகளை தேடும் மீட்பு படையினர்..!!

Published: 18 Mar 2022, 2:10 PM |
Updated: 18 Mar 2022, 2:17 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சரக்குக் கப்பலானது சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஈராக் நோக்கி சென்ற பொழுது மோசமான வானிலை காரணமாக கடலில் கவிழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இது பற்றி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், கப்பல் ஆபரேட்டர் சலிம் அல் மக்ரானி கூறுகையில், “மார்ச் 15, திங்கட்கிழமை, அல் சல்மி 6 என பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் துபாயின் அல் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து உம் கஸருக்கு (ஈராக்கில்) சரக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் புறப்பட்டது. அந்த கப்பலில் பொது சரக்குகள் மற்றும் கார்கள் இருந்தன. பின் மார்ச் 16 அன்று, சரக்குக் கப்பல் மோசமான வானிலையை எதிர்கொள்ளத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மார்ச் 17 அன்று, மதியம் 3 மணிக்கு, அல் சல்மி 6 கட்டளையின் கீழ் இல்லை என்று எங்களுக்கு தெரிய வந்தது” என தெரிவித்துள்ளார்.

கப்பல் கவிழ்ந்த செய்தி உறுதியாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த கப்பலில் இருந்த 30 பணியாளர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கப்பலின் ஆபரேட்டரான சலிம் அல் மக்ரானி கூற்றுப்படி, “30 மாலுமிகளில் 27 பேர் ஈரானிய அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டனர். பேரிடர் அழைப்பிற்கு பதிலளித்த எண்ணெய் டேங்கரான ஃப்ரண்ட் சவன்னாவால் ஒரு மாலுமி மீட்கப்பட்டார்” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

வானிலை ஆய்வாளர்கள் அச்சமயம் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக செய்தி தெரிவித்துள்ளனர். மீதமுள்ள இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கப்பல் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், சூடான், உகாண்டா, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.