ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு மாதங்களுக்கு ஷார்ஜாவை நோக்கி செல்லும் மலிஹா சாலையில் பகுதியளவு மூடலை அறிவித்துள்ளது. அதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விபரங்களையும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த பகுதியளவு மூடலானது மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை முதல் மே 27, 2022 வெள்ளி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வாகன ஓட்டிகள் செல்லக்கூடிய குறிப்பிட்ட மாற்று வழிகளையும் ஆணையம் அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து, கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் RTA கேட்டுக் கொண்டுள்ளது.
#Sharjah_Roads_Transport_Authority: Temporary diversion of traffic on Maliha Road towards Sharjah near Hoshi area for a period of two months starting from Sunday, March 27, 2022 at 5:00 am until Friday, May 27, 2022 pic.twitter.com/Y9zZipRheA
— RTA Sharjah (@RTA_Shj) March 24, 2022