ADVERTISEMENT

தூசி, மேக மூட்டத்துடன் இருக்கும் அமீரகத்தின் இன்றைய வானிலை… 10 அடி வரை கடல் அலைகள் உயரும் எனவும் தகவல்…!!

Published: 27 Mar 2022, 7:24 AM |
Updated: 27 Mar 2022, 7:28 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி புழுதிப்புயல் உருவாகி வருகின்றது. அதே போல் இன்றும் அமீரகத்தில் புழுதிப்புயல் உருவாகும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்றைய வானிலையானது தூசி நிறைந்ததாகவும், ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று வெப்பநிலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று இரவு மற்றும் திங்கள் காலை சில கிழக்கு உள் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மிதமாக வீசும் காற்று சில சமயங்களில் வலுவாக இருக்கும் என்றும், குறிப்பாக கடற்கரை பகுதிகளில் வீசும் காற்றினால் தூசி மற்றும் மணல் வெளிப்படுவதால் கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவில் கடல் மிகவும் மிதமானதாகவும் சில சமயம் கொந்தளிப்பாகவும் இருக்கும் என்றும் 10 அடி வரை அலைகள் உயர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT