ADVERTISEMENT

துபாய்: வெள்ளிக்கிழமைகளில் வாகனங்களை நிறுத்த இனி கட்டணம்.. இலவச பார்க்கிங் ரத்து..!!

Published: 28 Mar 2022, 6:15 PM |
Updated: 28 Mar 2022, 6:15 PM |
Posted By: admin

துபாயில் இதுவரை வெள்ளிக்கிழமைகளில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அது ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 14 மணிநேரம் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படும் என திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுக்கு மாடி பகுதியில் வாரத்தின் ஏழு நாட்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் சாலையோர பார்க்கிங் ஸ்லாட்டுகளில் அதிகபட்சமாக நான்கு மணிநேரம் தொடர்ந்து வாகனங்களை நிறுத்தலாம் என்றும் வாகன நிறுத்துமிடங்களில் 24 மணிநேரமும் மற்றும் அடுக்கு மாடி பகுதிகளில் 30 நாட்கள் வாகனங்களை நிறுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை நாட்களாக ஜனவரி 1 முதல் மாறிய பிறகும், துபாயில் கட்டண வாகன நிறுத்தம் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT